உச்ச(குடுமி)நீதிமன்றம்
கருணாநிதி பந்த் அறிவித்த போது அவரின் மீது பாய்ந்து தன் வெறியை காட்டினர் சில நீதிமான்கள். கர்நாடக அரசும், கேரள அரசும் நீர் விஷயமாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை ஒதுக்கி வைத்து விட்டன. அது எதுவும் இவர்களின் கண்களுக்கு தெரியாது. ஆனால் கருணாநிதி பதில் அளிக்க வில்லை என்றால் கைது செய்வோம் என்று மார்தட்டியவர்கள் இந்த கனவான்கள்.
பந்த நடத்துவது சட்ட விரோதம். சரி. கருணாநிதி செய்தது தப்பு என்றே வைத்து கொள்வோம். இப்போது ஒரிசாவில் அரங்கேறும் காட்சிகள் என்ன. ஆளும் கூட்டணியில் உள்ள பா.ஜ.க பந்தை ஆதரிக்கின்றது. மாநிலம் எங்கும் கலவரம். பொது போக்குவரத்து இல்லை. அரசு அலுவலகங்களில் சொற்ப ஆட்கள். இதற்கு என்ன செய்தது உச்ச நீதிமன்றம்? எல்லா நீதிபதிகளும் உச்சா அடிக்க சென்று விட்டார்கள் போலும்.
ஆக தமிழன் பந்த் நடத்தினால் தவறு. இந்தியாவில் வேறு யாராவது நடத்தினால் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று மறைமுகமாக கூறும் இந்த கயவர்களை என்ன செய்யலாம்.