வெண்தாடி

Saturday, April 23, 2011

என்னாங்கடா இது?

தமிழக தேர்தல் வந்தாலும் வந்தது இந்த பருப்புகளின் தொல்லை தாங்கவில்லை. பருப்புகளாவது பரவாயில்லை, பருப்புகளின் வாரிசு போல சில தமிழர்களும் ஏன் இப்படி மாறினர் என்பது தான் புரியவில்லை.



முக, ஜெ இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து ஜெயை அப்படியே தாங்கி பிடிக்கும் இவாளை என்ன செய்யலாம்.



கருணாநிதி ஊழல் செய்தான் என்று ஒரு டுபாக்கூரான் மற்ற பத்திரிக்கையில் வந்ததை இங்கே வந்து கழிந்து விட்டு செல்கின்றான். ஆனால் அவன் ஜெ செய்த ஊழலை பற்றி பேசமாட்டானாம். என்னாங்கடா இது?



புர்ச்சி தலைவி ஈழம் என்று முழங்கியதை தன் காதில் ஈயம் என்று வாங்கியதால் என்னமோ தீடீரென்று ஈய விசுவாசிகளாக சில டுபாக்கூர்கள் மாறி விட்டன. குடுமிகளும் அப்படியே தமிழர்களுக்காக போராடுவது போன்று மாய்மாலம் செய்கினறன. தினமலம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் புலிகளை பற்றி என்ன செய்திகளை வெளியிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். பிரபாகரனுக்கு பல முறை கருமாதி செய்ததால் அதை கருமாதி பத்திரிக்கை என்று சொல்பவரை கேட்டு பாருங்கள்.



ஈயம் பற்றி அய்யாவின் ஆட்சியில் பேசவாவது செய்யலாம். அம்மாவின் ஆட்சியில் குசு விட்டால் கூட உள்ளே தள்ளி விடுவார் என்பதை மொத்தமாக மறந்து விட்டனர் இந்த கோயபல்ஸ்சுகள்.



ஊயலாம். ஊயல் செய்யாதவன் எவன் இருக்கின்றான் இன்று? ஏதோ இந்த அரசியல்வியாதிகள்தான் ஊயல் செய்வது போல் எழுதிதள்ளுகின்றனர். அதிகாரிகள் பற்றி எதுவும் சொல்ல யாரும் முயற்சிப்பதில்லை.



2G என்று அடுத்த கூப்பாடு. உச்சா நீதிமன்றமோ எல்லா வழக்கையும் விட்டு விட்டு இது ஒன்றுதான் முக்கியம் என்று பிலிம் காட்டுகிறது. குஜராத் படுகொலைகள் பற்றி 8 ஆண்டுகள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. சுக்ராம் என்ன ஆனார்? அதை விடுங்கோ. 1.5 டன் தங்கம் சேர்த்து வைத்த நம் இடஒடுக்கீடு புகழ் கேதன் தேசாய் என்ன ஆனார்?



இட ஒதுக்கீட்டு வழக்கா, ஆறு மாதம் ஒத்திவை. முல்லை பெரியாரா அடுத்த ஆண்டு பார்க்கலாம். Deemed universityயா ஒத்திவை எட்டு மாதம். சுசாமி மனுவா உடனே கொண்டு வா மேசைக்கு என்கிறது உச்சா மன்றம்.



கேஜி ஊழல் செய்து சொத்து சேர்த்தாராம். சரி. இதற்கு முன்னால் இருந்த மகாகனம் சபர்வால் குடும்பத்து மீது எழுப்பபட்ட புகார்கள் என்ன ஆயின?



ஊழலை ஒழிக்க ஆயுதம் ஏந்திய புர்ச்சியாளரான பூஷன் குடும்பத்தார் 8 உச்சா நீதிமான்கள் ஊழல் பேர்வழிகள் என்று வெளிபடையாக சொன்னார்களே. அதை பற்றி யாராவது பேசினார்களா?



நீதிபதி ஊழல் என்றான் இவாள் எல்லாரும் நினைவில வரும் பெயர் ராமசாமி, தினகரன் மற்றும் கேஜிதான். மற்ற எல்லா பெயரும் selective amnesiaவில் மறந்து போய்விடும். என்னாங்கடா உங்க நியாயம்?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home