வெண்தாடி

Thursday, November 13, 2008

போலீஸுக்கு ஒரு Hats-Off

சட்டக் கல்லூரி பிரச்சனையில் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள் என்று எல்லா பதிவர்களும் போலீஸ் மீது பாய்கின்றனர். போலீசாரால் என்ன செய்ய முடியும். அவர்கள் கல்லூரியின் உள்ளே சென்று இருந்தால், சட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று எல்லா ஊடகங்களும் அவர்கள் மீது பாய்ந்து இருக்கும். எல்லா கருப்பு கோட்டுகளும் வக்கீல்களை தாக்கிவிட்டனர் என்று நாடு முழுவதும் கோர்டுக்கு போகாமல் தர்ணா செய்வார்கள்.

ஏற்கனவே சில முறை போலீசார் சட்ட கல்லூரி பிரச்சனையில் தலையிட்டு மூக்கறுந்த அனுபவம் உண்டு. எதற்கு நமக்கு பொல்லாப்பு என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். ஜாதி வெறி பிடித்த மிருகங்கள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து குதறி கடிபட்டு அழியட்டும்.

ஊசிப் போன பதார்த்தம் ஒன்று சந்தடி சாக்கில் கோட்டா என்று புலம்பி தன் ஜென்ம புத்தியை காட்டி இருக்கின்றது. இவையெல்லாம் என்றுதான் திருந்துமோ தெரியவில்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home