வெண்தாடி

Sunday, July 27, 2008

CBக்களின் இரட்டை நாக்கு - III

தீவிரவாதம் என்று ஆரம்பித்தாலே அப்சல் குரு என்று அவா பேச ஆரம்பித்துவிடுவா. இன்று கூட ஒரு பதிவில் மறை கழண்ட கேஸ் ஒன்று வந்து கழிந்துவிட்டு சென்று இருக்கின்றது.

அறிவு ஜீவிகளே கொஞ்சமாவது உங்க மூளையை use பண்ணுங்கள். அப்சல் குரு குற்றவாளி. சரி. அவன் எங்கே இருக்கிறான். சிறையில் தானே. அவனை தூக்கில் போடுவதா இல்லையா என்பது தானே பிரச்சனை. அதற்கும் இப்போது நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் என்ன சம்பந்தம். (அ)யோக்கிய சிகாமணிகளே அத்துவானி ஒரு கடைந்தெடுத்த தீவிரவாதியை விமானத்தில் ஏற்றி சென்று ஆப்கானில் இறக்கி விட்டுவிட்டு வந்தாரே அதை பற்றி ஒரு பதிவு... வேண்டாம். ஒரு பின்னூட்டமாவது போடுவீர்களா.

இந்த குண்டு வெடிப்புகள் தமிழகத்தில் நடந்து இருந்தால் உடனே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. ஆட்சியை கலையுங்கள். கையாலாகா கருணாநிதி என்று கூப்பாடு எழுந்து இருக்கும். பல்வேறு தலைப்புகளிள் நம் தேச பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழும் காட்சியை பதிவுலகில் கண்டு இருக்கலாம். குண்டு அங்கே வெடித்ததால் தீவிரவாதிகள் வெறிசெயல் என்று மட்டும் தலைப்புகள். இதிலே அரசியலை இழுக்காதீங்கோ என்று பிரச்சாரம் வேறு.

அடங்கொய்யாலே சென்னையில் வெடித்து இருந்தால் நீங்கள் இப்படியா முதுகு சொறிந்து கொண்டு இருப்பீர்கள்.

CBக்களின் இரட்டை நாக்கு - II

கடந்த இரு நாட்களாக Bangalore மற்றும் Ahmedabadத்தில் பல குண்டுகள் வெடித்து உள்ளன. பல அப்பாவிகள் இதில் பலியாகி உள்ளனர். இது போதுமே CBக்களுக்கு. இதற்கு எல்லாம் மத்திய அரசுதான் காரணம் என்பது போல பதிவுகள். ஒரு பருப்புவின் பதிவில் தேவை இல்லாமல் புலிகளை பற்றிய வரிகள் வேறு. அடங்கொய்யாலே குண்டு வெடித்தது இந்தியாவை ரட்சிக்க வந்த பா.ஜ.க ஆட்சி புரியும் மாநிலங்களில். தேவை இல்லாமல் ஏண்டா மற்றவர்களை பற்றி பேசுகின்றீர்கள்.

இதற்கு காரணம் Sleeper Cellகளாம். சரி. அரசாங்கங்கள் எப்படி இந்த Sleeper Cellகளை விட்டு வைத்தார்கள். அங்கே எல்லாம் கருணாநிதி ஆட்சியா நடந்து வந்தது. karnatakaவில் பா.ஜ.க அரசாங்கம் (சில மாதங்கள் முன்பு வரை கூட்டணி ஆட்சியிலும் பா.ஜ.க பங்கு வகித்தது). Gujarathதிலோ பல வருடங்களாக உத்தமர் மோடியின் நல்லாட்சி. தேசபக்தர்கள் நடத்திய ஆட்சியில் எப்படி Sleeper Cellகள் உருவாகின. ஆட்சியில் இருப்பவர்கள் தூங்கி வழிந்ததைதானே இது காட்டுகின்றது. இதை பற்றி எந்த கணவானாவது பதிவு போடுவாரா.

கேட்டா தடாவை தூக்கிட்டா, போடாவை நீக்கிட்டா என்று வசனம் பேசுவர். கோமாளிகளே ஒரு தீவிரவாதியை தடா,பொடாவில் மட்டும்தான் பிடிக்க முடியுமா. இந்தியாவில் வேறு சட்டங்களே இல்லையா.

தமிழகத்தில் பழைய குண்டுகள் கிடைத்தபோது அய்யோ அய்யோ என்று கூப்பாடு போட்ட CBக்களே இப்போது என்ன சொல்கின்றீர்கள். கார் டயர் வெடித்தால் கூட கருணாநிதியின் ஆட்சியை குறை கூறும் பருப்புகளே இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பு ஏற்று Karnataka மற்றும் Gujarat அரசுகளை பதவியில் இருந்து விலகுமாறு ஒரு பதிவாவது எழுதுவீர்களா?

CBக்களின் ஒற்றுமையை பார்த்தாவது திருந்துங்கள் தமிழர்களே.

CBக்களின் இரட்டை நாக்கு - I

CBக்களுக்கு இரட்டை நாக்கு என்று பெரியார் பல முறை நிரூபித்து இருக்கின்றார். அவா எல்லாம் திருந்திவிட்டதாக தப்புகணக்கு போடும் கருங்காலிகளே சற்று சிந்தியுங்கள்.

சமீபத்தில் நடந்த பாராளமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு பிழைத்து கொண்டது. உடனே CBக்களின் கூச்சல் ஆரம்பித்துவிட்டது. இது எல்லாம் வெற்றியா? பணம் விளையாடியது. மானம் போனது. கிரிமினல்கள் ஜெயிலில் இருந்து கொண்டுவரபட்டு ஓட்டு போட்டனர். சிபு சோரன் அமைச்சர் ஆகிறார். கனிமொழி அமைச்சர். காடுவெட்டி வெளியே வருகின்றார். அம்பானிக்கு பல சலுகைகள் என்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர். இவர்கள் எல்லாம் உத்தமர் போன்று பல பதிவுகள். அதிலே வழக்கம் போல அனானிகளாக வந்து பலர் வாந்தி எடுத்தனர். எல்லோருக்கும் கடுமையான வயத்தெரிச்சல் என்று தெளிவாக தெரிகின்றது.

அட பருப்புகளே, அரசை எதிர்த்து முலயம் கட்சி ஆட்கள் 6 பேர் ஓட்டு போட்டனரே. அவர்களை விலைக்கு வாங்கியதை பற்றி பேச முடியுமா. அதிருப்தி காங்கிரஸ் எம்பியும் எதிர்த்து ஓட்டு போட்டாரே. அவருக்கு அத்வானி எவ்வளவு கோடி கொடுத்தார் என்று எழுதமுடியுமா.

சரி இதையெல்லாம விட்டு தள்ளுங்கள். கர்நாடகாவில் நடந்த குதிரை பேரத்தை பற்றி எந்த உஞ்சவிருத்தியாவது பதிவு போட்டதா. தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கவுடா கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற 5 MLAக்கள் ஒரு மாதத்தில் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளும் பா.ஜ.கவில் சேர்ந்து விட்டனர். அதில் மூன்று பேருக்கு அமைச்சர் பதவி வழங்கபட்டு உள்ளது. ஒரு ஆளுக்கு வாரிய சேர்மன் பதவி. இவா எல்லாம் தேச நலனை கருத்தில் கொண்டா பா.ஜ.கவில் சேர்ந்தனர். கமலம் மலர்ந்தது என்று பெருமிதத்தோடு பதிவு போட்ட கோமான்கள் கமலம் இப்படி கப்பு அடிக்கும் காரியத்தை செய்ததை பற்றி பதிவு போட்டார்களா?.

எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ.கவை ஆதரிக்கும் CBக்களை பார்த்தாவது திருந்துங்கள் தமிழர்களே.