CBக்களின் இரட்டை நாக்கு - II
கடந்த இரு நாட்களாக Bangalore மற்றும் Ahmedabadத்தில் பல குண்டுகள் வெடித்து உள்ளன. பல அப்பாவிகள் இதில் பலியாகி உள்ளனர். இது போதுமே CBக்களுக்கு. இதற்கு எல்லாம் மத்திய அரசுதான் காரணம் என்பது போல பதிவுகள். ஒரு பருப்புவின் பதிவில் தேவை இல்லாமல் புலிகளை பற்றிய வரிகள் வேறு. அடங்கொய்யாலே குண்டு வெடித்தது இந்தியாவை ரட்சிக்க வந்த பா.ஜ.க ஆட்சி புரியும் மாநிலங்களில். தேவை இல்லாமல் ஏண்டா மற்றவர்களை பற்றி பேசுகின்றீர்கள்.
இதற்கு காரணம் Sleeper Cellகளாம். சரி. அரசாங்கங்கள் எப்படி இந்த Sleeper Cellகளை விட்டு வைத்தார்கள். அங்கே எல்லாம் கருணாநிதி ஆட்சியா நடந்து வந்தது. karnatakaவில் பா.ஜ.க அரசாங்கம் (சில மாதங்கள் முன்பு வரை கூட்டணி ஆட்சியிலும் பா.ஜ.க பங்கு வகித்தது). Gujarathதிலோ பல வருடங்களாக உத்தமர் மோடியின் நல்லாட்சி. தேசபக்தர்கள் நடத்திய ஆட்சியில் எப்படி Sleeper Cellகள் உருவாகின. ஆட்சியில் இருப்பவர்கள் தூங்கி வழிந்ததைதானே இது காட்டுகின்றது. இதை பற்றி எந்த கணவானாவது பதிவு போடுவாரா.
கேட்டா தடாவை தூக்கிட்டா, போடாவை நீக்கிட்டா என்று வசனம் பேசுவர். கோமாளிகளே ஒரு தீவிரவாதியை தடா,பொடாவில் மட்டும்தான் பிடிக்க முடியுமா. இந்தியாவில் வேறு சட்டங்களே இல்லையா.
தமிழகத்தில் பழைய குண்டுகள் கிடைத்தபோது அய்யோ அய்யோ என்று கூப்பாடு போட்ட CBக்களே இப்போது என்ன சொல்கின்றீர்கள். கார் டயர் வெடித்தால் கூட கருணாநிதியின் ஆட்சியை குறை கூறும் பருப்புகளே இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பு ஏற்று Karnataka மற்றும் Gujarat அரசுகளை பதவியில் இருந்து விலகுமாறு ஒரு பதிவாவது எழுதுவீர்களா?
CBக்களின் ஒற்றுமையை பார்த்தாவது திருந்துங்கள் தமிழர்களே.
2 Comments:
அட்டகாசம் வெண் தாடி.
அசலமோன்
By Asalamsmt, At July 27, 2008 at 6:29 AM
///கார் டயர் வெடித்தால் கூட கருணாநிதியின் ஆட்சியை குறை கூறும் பருப்புகளே இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பு ஏற்று Karnataka மற்றும் Gujarat அரசுகளை பதவியில் இருந்து விலகுமாறு ஒரு பதிவாவது எழுதுவீர்களா?//
பதில் தெரிந்தே கேள்வி கேட்கிறீர்கள்.
By Darren, At July 27, 2008 at 6:30 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home