வெண்தாடி

Monday, May 14, 2012

“மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” நூல் வெளியீடு


அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்,

தந்தை பெரியார் அவர்கள் 1929 மற்றும் 1954-ல் இருமுறை மலேசியா-சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு பிராச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளார்கள்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க தந்தைபெரியாரின் மலாயா-சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் நிகழ்வுகள், பிராச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் பற்றிய முழு தகவல்களை தொகுத்து “மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” என்ற நூலாக வெளியிடப்படவுள்ளோம்.

நூல் வெளியீட்டு விழாவை சிங்கப்பூர் பொது நூலகங்கள் ஆதரவுடன் பெரியார் சமூக சேவை மன்றம் கவிமாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. விழா வருகிற மே-18ம் தேதி வெள்ளி மாலை 6.30 மணிக்கு ஜுரோங் வட்டார நூலகத்தில் நடைப்பெறவுள்ளது.

நூல் வெளியீட்டு விழாவில் நூலின் தொகுப்பாசிரியர் “தமிழர் தலைவர்” மானமிகு.டாக்டர் கி.வீரமணி அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கவுள்ளார்கள். மேல் விவரங்கள் விழா அழைப்பிதழில் காண்க.

விழா அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவசியம் தாங்கள் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி
க.பூபாலன்
பெரியார் ச‌மூக‌ சேவை ம‌ன்ற‌ம்