வெண்தாடி

Wednesday, June 3, 2009

சகோதர யுத்தம் :-(

நானும் பொறுத்துப்பார்த்தேன். தாங்க முடியவில்லை. திடீர் ஈழ ஆதரவாளர்களின் ஆட்டம் எல்லையை மீறி செல்கின்றது. அதை தூண்டி விடுகின்றனர் சில ஈழத்தமிழர்கள்.

தமிழன் சோம்பேறி. இன உணர்வு இல்லாதவன். மானம் ரோஷம் இல்லாதவன் என்று சகட்டு மேனிக்கு தாக்குதல். எல்லாவற்றிற்கும் ஒர் எல்லை உண்டு நணபர்களே.

அன்று எதற்குமே வழியில்லாமல் வந்திறங்கிய பல ஈழத்தமிழரை அன்போடு ஆதரித்து அரவணைத்தது தமிழக உறவுகள்தான் என்பதை மறக்கவேண்டாம்.

தமிழக தமிழரை ஏளனமாக பார்த்து பின்னால் தூற்றிய ஈழ தமிழர் பலரை நான் அறிவேன். தமிழ்நாட்டு ஆண்/பெண்னை மணந்த காரணத்தினால் குடும்பத்தாரால் ஏளனம் செய்யபட்ட ஈழ தமிழர்களையும் (யாழில் அனைத்தையும் தொலைத்து விட்டு அகதியாக வந்தவர்கள்தான்) நான் அறிவேன்.

"அவர்களுக்கு நன்றாக வேண்டும். அகதியாக இருக்கும் போதே இவ்வளவு திமிராக இருக்கின்றனரே" என்று பேசிய பல தமிழக தமிழர்களை (ஐய்ரோப்பாவில் வாழ்பவர்கள்) சந்தித்து உரையாடியவன் நான்.

"வடக்கில் இருக்கும் வேசி மகன்" என்று சொரனை கெட்ட தமிழக தமிழனை அன்போடு அழைத்த அக்மார்க் ஈழ தமிழனையும் நான் அறிவேன்.

இவ்வளவிற்கு பிறகும் ஈழம் மலராதா என்று ஏங்கி நிற்கும் ஒரு தமிழன் நான். இணைய வீரர்களே உம் வீரம் எமக்கு புல்லரிப்பை தருகின்றது. தரக்குறைவான தாக்குதல்களினால் என் போன்று மிச்சம் இருக்கும் இன உணர்வாளர்களையும் இழக்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகின்றீர்கள் என்பதை வேதனையோடு தெரிவிக்கின்றேன்.